அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 37-53 (நவம்பர் 2016)
____________________________________________________________
நன்னீர் இறாலின் நோய் எதிர்ப்பியல் அமைப்பை பாதிக்கும்
பல்வேறு அழுத்த காரணிகள்
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 37-53, நவம்பர் 2016
அ. ஜேசு ஆரோக்கியராஜ், கு. வெங்கடேஷ், சௌ. முகேஷ் குமார்,
நா. பிரசாந்த் பட், நி. ஃபைசல், ர. காயத்ரி, ப. ராஜேஷ்
திட்டசுருக்கம்
மேக்ரோபிராக்கியம் ரோசன்பெர்ஜி பொதுவாக நன்னீர் இறால் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.
நன்னீரில் உணவுக்காக பரவலாக வளர்க்கப்படுகின்ற கிரிஸ்டேசியன் இனங்களில் இதுவும் ஒன்றாகும். இது
உருவத்தில் பெரியதாகவும் நன்கு நீந்தக்கூடியவையாகவும் இருக்கின்றன. மே. ரோசன்பெர்ஜி உலகெங்கும்
பரவிக் காணப்படுகிறது. மேலும், இவைகளின் தசைகள் அதிக சுவை கொண்டவையாக இருப்பதினால்
அதிக விலை மதிப்பைக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் உலக அளவில் இவற்றின் தேவைகள்
அதிகமாக இருப்பதினால் இந்த நன்னீர் இறாலானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கிறது. எனவே இவைகள் உலகெங்கும் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. ஆயினும் மற்ற
உயிரினங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பைப் போன்று இயற்வேதியல் மற்றும் உயிரியல் காரணிகளினால்
நன்னீர் இறலின் இனப்பெருக்கம் மற்றும் அதன் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த
விமர்சனக்கட்டுரையில், மே. ரோசன்பெர்ஜியின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்
இயற்வேதியல் மற்றும் உயிரியல் காரணிகள் மற்றும் அவற்றிற்கு எதிராக செயல்படும் நோய்யெதிர்ப்பு
காரணிகளைப்பற்றி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
____________________________________________________________