அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 2-24 (நவம்பர் 2016)
____________________________________________________________
உயிர்பரப்புகவர்ச்சி: மாசு பட்ட கழிவு நீரை சுத்தப்படுத்தும் ஒரு
சிகிச்சை நுட்பம்
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 2-24, நவம்பர் 2016
கு. விஜயராகவன், தி. பகவதி புஷ்பா, ஜோ. ஜெகன்
திட்டசுருக்கம்
நீரிலிருந்து மாசுக்களை குறிப்பாக உலோகம் போன்ற எளிதில் மக்காத பொருட்களை நீக்க பயன்படுத்தும்
ஒரு தொழில்நுட்பம் உயிர்பரப்புகவர்ச்சியாகும். பல்வேறு உயிர் பொருட்களான பாக்டீரியா, பூஞ்சை,
பாசிகள் மற்றும் தொழில்துறை, வேளான் கழிவுகள் இந்த மாசுக்களை பிணைப்பதாக அறியப்படுகிறது.
இந்த விமர்சனத்தில், உலோக அயனிகளை நீக்கும் பல்வேறு உயிர் உறிஞ்சிப் பொருட்களின் உருஞ்சும்
திறங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, உயிரியின் ஆக்ககூறுகளில் உள்ள கார்பாக்ஸில்,
அமைன் மற்றும் பாஸ்போனேட் போன்ற செயல்பாட்டுக் குழுக்களின் உயிர் உருஞ்சும் ஆற்றல்கள்
விவரிக்கப்பட்டுள்ளது. உயிர் உருஞ்சி பிணைப்பு பொறிமுறையும், உயிர்பரப்புக்கவர்ச்சி செயல்முறையைப்
பாதிக்கும் காரணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கவர்ச்சி சமவெப்பநிலை, இயக்கவியல்
மற்றும் இதற்காக பயன்படுத்தப்படும் கணிதமாதிரிகள் குறித்து விவரமான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உயிர்பொருட்களின் உலோக
பிணைப்புத்திறன் கொண்டு ஒரு முறைப்படுத்தப்பட்ட ஒப்பீடு வழங்கப்படுள்ளது. நுண்ணுயிர்
உயிர்பரப்புகவர்ச்சி தொடர்புடைய பிரச்சனைகளை ஆய்வு செய்து அதன் பொருத்தமான தீர்வு முறைகளும்
விவாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான கழிவுநீர் சுத்திகரிப்புக்கு, உயிர் உறிஞ்சி நிரப்பப்பட்ட படுக்கை
நிரலை கட்டமைப்பு பரிந்துரைக்கப்பட்டதோடு, அதன் செயல்திறனை பாதிக்கும் காரணிகளும்
விவாதிக்கப்பட்டுள்ளன . இந்த ஆய்வு கட்டுரை மூலம் ஆய்வகங்களில் மட்டும் இல்லாமல், உண்மை
சூழலிலும் உயிர் உறிஞ்சி பொருட்களை பரிசோதனை செய்வது அவசியம் என வரையுறுத்தப்படுகிறது.
இவ்வாறு இந்த கட்டுரை ஆய்வானது, உயிர்பரப்புகவர்ச்சி தொழில்நுட்பத்தின் சாதனைகள், மற்றும்
தற்போதைய நிலை மதிப்புரைகளைத் தருவதோடு இந்த ஆராய்ச்சியில் எல்லை நுண்ணறிவை வழங்கும்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
____________________________________________________________