விஞ்ஞானி
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
சமூக வலைத்தளம்
Advertisement
ViNaNiE
புத்தகம் மற்றும் ஆய்வு
கட்டுரைகள் தயாரிப்பதில்
உதவி பெற
மற்ற அறிவியல்
சார்ந்த
சேவைகளுக்கு
எங்களை தொடர்பு
கொள்ளுங்கள்

ஆராய்ச்சியாளருக்கான வழிகாட்டி

ஆய்வுக்கட்டுரை சமர்பித்தல்:

ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிப்பதற்கு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்ற
வேண்டும்.
ஆய்வுக்கட்டுரையானது புதியதாக மற்றும் இதுவரை வெளியிடப்படாத
உள்ளடக்கம் கொண்டதாக இருக்கவேண்டும். இந்த ஆய்வுக்கட்டுரையை
தமிழில் வெளியிட்டோ அல்லது வெளியிட சமர்பிக்கப்பட்டோ இருக்கக்கூடாது.
அனைத்து ஆராய்ச்சியாளர்களும் இந்நூலில் ஆய்வுக்கட்டுரையை
வெளியிடுவதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
       
ஆய்வுக்கட்டுரையை நேரடியாக மின்னனு வடிவத்தில் இதழின் ஆசிரியரின்
மின்னஞ்சல் முகவரிக்கு ([email protected]) அனுப்பவேண்டும். ஆராய்ச்சியாளர்கள்
தங்களது ஆய்வுக்கட்டுரையை Microsoft word என்ற மென்பொருள் மூலமாக
தயாரிக்கவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கட்டுரையை மின்னஞ்சல்
வழியாக இணைத்து அனுப்பவேண்டும். ஆய்வுக்கட்டுரை தயாரிக்கும்
வழிமுறை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுக கடிதத்தின் மூலம், ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரையில்
உள்ள அனைத்து ஆய்வுகளும் உண்மையானவை என்றும், இந்த ஆய்வானது
வேறெந்த தமிழ் மொழி பத்திரிக்கையிலும் முழுவதுமாகவோ அல்லது
பகுதியாகவோ வெளியிடப்படவில்லை என்றும் மற்றும் வேறெந்த
பத்திரிக்கையிலும் இவை சமர்பிக்கபடவில்லை என்றும் உறுதி
செய்யவேண்டும்.

இந்நூலானது தொகுப்பு ஆய்வுக்கட்டுரையை (Research Review Paper) மட்டும்
வெளியிடும். இந்நூலில் சமர்பிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைக்கு பக்கம் மற்றும்
வார்த்தைகளுக்கு வரம்புகள் இல்லை.

கட்டுரை சமர்பித்தலுக்கான வழிமுறை:

ஆய்வுக்கட்டுரையானது ஆங்கிலத்தில் (ENGLISH) MS-Word என்ற மென்பொருள்
கொண்டு தயாரிக்கப்படவேண்டும். கட்டுரைகள் இரட்டை இடைவெளி
கொண்டதாகவும், டைம்ஸ் நியூ ரோமன் என்ற எழுத்து வடிவில் அளவு 12-யை
கொண்டதாகவும் இருக்கவேண்டும். ஆய்வுக்கட்டுரையின் உள்ளடக்கங்கள்
அனைத்தும் ஒற்றை ஆவனத்திற்க்குள் இருக்கவேண்டும்.

ஆய்வுக்கட்டுரையானது கீழ்காணும் வழிமுறையை பின்பற்றி
இருக்கவேண்டும். தலைப்பு, ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள், அவர்களின்
முகவரி, ஆய்வுச்சுருக்கம், முக்கிய வார்த்தைகள், ஆய்வுக்கட்டுரை
உள்ளடக்கம், சான்றாதாரம், நன்றி நவிழ்தல், படங்கள் மற்றும்
அட்டவணைகள்.

ஆய்வுக்கட்டுரையானது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கவேண்டும் மற்றும்
ஒவ்வொரு பிரிவிற்கும் தெளிவாக எண் கொடுக்கப்படவேண்டும்.
உதாரணமாக, எண் 1-யை பயன்படுத்தும்போது அதன் துணை பிரிவுகளை 1.1,
1.2 என்றவாறு குறிப்பிடவேண்டும். ஆய்வு சுருக்கம் மற்றும் சான்றாதாரம்
போன்றவற்றிற்கு எண்கள் கொடுக்கக்கூடாது.

சான்றாதாரம் பிரிவுக்கான வடிவமைப்பு வழிமுறைகள்:

கட்டுரைக்குள்ளே கொடுக்கப்படும் சான்றாதாரம்:

கட்டுரைக்குள்ளே குறிப்பிடும் சான்றாதாரத்தை கட்டுரை முடிவின் கீழே
ஒன்றன்பின் ஒன்றாக விரிவாக கொடுக்கப்படவேண்டும். சரியான
சான்றாதாரத்தை கொடுப்பது ஆராய்ச்சியாளர்களின் கடமையாகும்.
கட்டுரைக்குள்ளே கொடுக்கப்படும் சான்றாதாரம் எண் வடிவில் சதுர
அடைப்புக்குறிக்குள் இருக்கவேண்டும்.

உதாரணம் 1: Kumar et al. [1]

உதாரணம் 2: due to increased pressure [2,4]

வெளியிடப்படாத ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள்
சான்றாதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

கட்டுரை முடிவில் கொடுக்கப்படும் சான்றாதாரம்:

சான்றாதாரங்கள் கட்டுரையில் தோன்றிய வரிசைப்படி, கட்டுரையின் முடிவில்
கொடுக்கப்படவேண்டும்.

உதாரணம்:
சான்றாதாரம் ஆய்வுக்கட்டுரையாக இருந்தால் பின்வருமாறு எழுதவேண்டும்:
[1] Kumar, A.V.K., Harry, S. and Henry, R. (2015) Adsorption of nitrate using activated carbon.
Journal of Environmental Health and Science, 34, 231-238. 
சான்றாதாரம் புத்தகமாக இருந்தால் பின்வருமாறு எழுதவேண்டும்:
[1] Heinemann, K. and Marie, S. (2012) Adsorption science and applications. 3rd ed. Amsterdam:
Albino Publishing Inc., pp. 45-59.
சான்றாதாரம் புத்தகத்தின் ஒரு பாகமாக இருந்தால் பின்வருமாறு
எழுதவேண்டும்.
[1] Yun, S.R. and Won, P.K. (2011) Constructed wetlands. In: Brandon, Y.S. and Park, A.D. Eds.;
Introduction to Best Management Practices. Amsterdam: Albino Publishing Inc., pp. 101-164.

படங்கள்:

கட்டுரையோடு சமர்பிக்கப்படும் படங்கள் (வரைபடம், புகைப்படம் மற்றும்
நுண்வரைபடம்), உயர் தரமானதாகவும் (High Resolution) மற்றும் எளிதில் மாற்றம்
செய்யக்கூடிய வடிவத்திலும் (Format) இருக்கவேண்டும். அவற்றை கீழே
குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தயார் செய்யவும்.

(1) 300 dpi அல்லது அதற்கும் அதிகமாக இருக்கவேண்டும்.
(2) படங்களின் தலைப்புகள் தனியாக கொடுக்கப்படவேண்டும்.
(3) படத்தின் அளவானது இதழின் பக்கங்களுக்கு ஏற்றாற்போல்
இருக்கவேண்டும்.
(4) இவை MS-Word வடிவில் இருக்கவேண்டும்.
(5) நீங்கள் தயாரிக்கும் படங்களானது MS-Word-ல் பயன்படுத்தக்கூடிய
வகையிலும் மற்றும் அவற்றை MS-Word-ல் ஒட்டும்போது எவ்வித இழப்பும்
இல்லாத வடிவத்தில் இருக்கவேண்டும்.
(6) புகைப்படங்கள் JPEG கோப்புகளாக (300 dpi) இருத்தல் நல்லது.

அட்டவணை:

அட்டவணையை MS Word மென்பொருளின் உதவியுடன் தயாரிக்க வேண்டும்.
அட்டவணையை சமர்பிக்கும்போது அவை திருத்தம் செய்யும் வடிவில்
இருக்கவேண்டும். மாறாக, அவை படங்கள் வடிவில் இருக்கக்கூடாது.

சுருக்கெழுத்தானது அட்டவணையின் முடிவில் விரிவாக எழுதப்படவேண்டும்
அல்லது அட்டவணையின் தலைப்பில் ஒரு பகுதியாக குறிப்பிடவேண்டும்.
முன்னதாக, வெளியிடப்பட்ட பதிப்புரிமம் பெற்ற ஆராய்ச்சி கட்டுரையில்
இருந்த தகவலை அட்டவணையில் குறிப்பிட்டிருந்தால் அவற்றின்
உண்மையான சான்றாதாரத்தை கொடுக்கவேண்டும்.

நன்றி நவிழ்தல்:

ஆய்வுக்கட்டுரையில் நிதி ஆதாரங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடவேண்டும்.
நிதி கொடுக்கப்பட்ட ஆதார எண்கள் மற்றும் அவற்றின் தகவல் அறியும்
வலைதளம் பற்றியும் குறிப்பிடவேண்டியது ஆராய்ச்சியாளரின் கடமையாகும்.

பதிப்புரிமம் பெற்று வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் இருந்து
தேவைப்படும் படங்கள், அட்டவணைகள் மற்றும் உரை பத்திகளை அவர்களின்
அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும். அவர்களிடமிருந்து பெறப்பட்ட
அனுமதியை, நீங்கள் ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்கும்போது சேர்த்து
சமர்பிக்கவும். ஆராய்ச்சியாளர்கள் மேற்கண்ட ஆதாரம் இல்லாமல்
சமர்பித்தால் அவைகள், அந்த ஆராய்ச்சியாளர்களின் சொந்த தகவல் என்றே
கருதப்படும்.
விஞ்ஞானி பதிப்பகம்
இணைப்புகள்
சமூக வலைத்தளம்
Copyright © 2016 by VINANIE  ·  All Rights reserved  ·  E-Mail: [email protected]

commercial cleaning broward