விஞ்ஞானி
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
சமூக வலைத்தளம்
Advertisement
ViNaNiE
புத்தகம் மற்றும் ஆய்வு
கட்டுரைகள் தயாரிப்பதில்
உதவி பெற
மற்ற அறிவியல்
சார்ந்த
சேவைகளுக்கு
எங்களை தொடர்பு
கொள்ளுங்கள்
விஞ்ஞானி பதிப்பகம்
இணைப்புகள்
சமூக வலைத்தளம்
Copyright © 2016 by VINANIE  ·  All Rights reserved  ·  E-Mail: [email protected]

commercial cleaning broward
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்

பகுதி 1, எண் 1, பக்கங்கள் 67-81 (நவம்பர் 2016)
____________________________________________________________

கல்லீரல் நோயின்போது ஏற்படும் அகச்சீத அழற்சி

அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 67-81, நவம்பர் 2016 
பாலசுப்ரமணியன் வைரப்பன்

VIEW FULL TEXT IN PDF


திட்டசுருக்கம்

ஈரலரிப்புடன் கூடிய உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் அகச்சீத அழற்சி பற்றியும் அண்மை காலமாக
இந்நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்தும் இந்த விமர்சன
ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. அகச்சீத அழற்சியானது கல்லீரல் சார்ந்த சாதகமற்ற
நிகழ்வுகள், நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இறப்பு ஆகியவற்றை கணிக்கும்
உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது. கல்லீரல் இரத்த ஓட்டத்தினுள் தழைம உயிரகத்தினால் (நைட்ரிக்
ஆக்சைடு) ஏற்படும் ஏற்றத்தாழ்வுடைய செயல்பாட்டைக் கொண்டு அகச்சீத அழற்சியை கண்டறியலாம்.
மேலும், தழைம உயிரகம் குறைந்த அளவு கிடைப்பதனாலும் மற்றும் ரியாக்டிவ் ஆக்ஸிஜன் இனமானது
தழைம உயிரகத்தை அழிப்பதனாலும் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. மேலும் வீக்க குறியீடுகள்
அதிகரிக்கும்போது தழைம உயிரகம் உற்பத்தி தடைபடுவதோடு மட்டுமல்லாமல் ஈரலரிக்கப்பட்ட
கல்லீரலின் அகச்சீத அழற்சிக்கும் காரணமாக உள்ளது. ஆகவே, தழைம உயிரகத்தின் இருப்பை
கல்லீரலின் இரத்த ஓட்டத்தில் அதிகப்படுத்துவதின் மூலமாக அகச்சீத அழற்சி மற்றும் ஈரலரிப்புடன்
கூடிய உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்படும் நோயாளிகளை சரி செய்யலாம் என கருதப்படுகிறது.
மேலும், தழைம உயிரகத்தின் இருப்பை அதிகரிக்க உதவும் சிகிச்சை காரணிகள் அகச்சீத தழைம உயிரக
தயாரிப்பு நொதியின் செயல்பாட்டை மேம்படுத்துவதின் மூலமாகவும் கல்லீரலில் சமச்சீரற்ற டைமீத்தைல்
அர்ஜினெனை குறைப்பதின் மூலமாகவும் செயல்படுகிறது. சமச்சீரற்ற டைமீத்தைல் அர்ஜினென் என்பது
அகச்சீத தழைம உயிரக தயாரிப்பு நொதியின் உள்ளார்ந்த பண்பேற்றியாகும் மற்றும் ஈரலரிப்புள்ள
கல்லீரலினுள் ஏற்படுகிற உயர் இரத்தநாள அழுத்தத்திற்கு இது ஒரு முக்கிய இடைநிலை காரணியாக
உள்ளது. அகச்சீத அழற்சி மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் கல்லீரல் நோய் முற்றிய நிலையில் உள்ள
நோயாளிகளுக்கு சிகிச்சை சார்ந்த ஆராய்ச்சியானது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
____________________________________________________________