விஞ்ஞானி
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
சமூக வலைத்தளம்
Advertisement
ViNaNiE
புத்தகம் மற்றும் ஆய்வு
கட்டுரைகள் தயாரிப்பதில்
உதவி பெற
மற்ற அறிவியல்
சார்ந்த
சேவைகளுக்கு
எங்களை தொடர்பு
கொள்ளுங்கள்
முன்னுரை

விஞ்ஞானி பதிப்பகம் மூலமாக தமிழ் மொழியில் முதன்முறையாக தமிழ்-வழி
அறிவியல் ஆராய்ச்சி நூல் வெளியிடுவதில் மிக்க பெருமை கொள்கிறோம்.
“அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்” என்ற
இந்நூலானது தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகத்தின் பல்வேறு நாடுகளில்
உள்ள தமிழ் சமூகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்/ கல்வியாளர்கள்/ அறிவியல்
மாணவர்கள்/ தொழில்துறையாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும்
நுண்ணறிவை பகிர்ந்து கொள்ள வழி செய்யும்.

தமிழ் நாட்டில் மிக சிறந்த மாநில மற்றும் மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், 
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ
கல்லூரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
இருக்கின்றன. இங்கு பயிலும் மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சிக்காக
ஆங்கில மற்றும் பிற மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சி
கட்டுரைகளையே பின்பற்ற வேண்டியிருக்கிறது. மேலும், இம்மாணவர்கள்
தங்கள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை, வல்லுனர்கள் உதவியோடு, ஆங்கில
பத்திரிக்கையிலேயே பிரசுரிக்க விரும்புகின்றனர். பிற மொழிகளில்
பிரசுரிக்கப்படும் ஆராய்ச்சி கட்டுரைகளை முழுவதுமாக புரிந்துகொள்ள பல
ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக தமிழ்-வழி கல்வி பயின்ற மாணவர்கள்
சிரமப்படுகின்றனர். இதனால், இம்மாணவர்கள் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு
மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் பின்தங்கிவிடுவதோடு, சர்வதேச
விஞ்ஞான சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த நிலைமை
மாற, தமிழ் மொழியில் பிரசுரிக்கப்படும் அறிவியல் ஆராய்ச்சி நூல்
அவசியமாகிறது. மேலும், தாய்மொழி மூலம் கற்பிக்கப்படும் விஞ்ஞான அறிவு
மாணவர்களை சுலபமாக சென்றடையும்.

எனவே, தமிழ் சமூக முன்னேற்றத்திற்க்காக, தமிழ் மீது பற்று கொண்ட
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை “அறிவியல், பொறியியல்
மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்” மூலம் வெளியிட அழைக்கிறோம். இந்த
முயற்சியின் மூலம், இளம் விஞ்ஞானிகளை தமிழ்-வழியாக ஆய்வு
மேற்கொள்ள ஊக்குவிக்கலாம்.

இந்நூல், அனைத்து அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப
துறைகளிலும் விமர்சன ஆய்வு கட்டுரைகளை (Research Review Articles)
வெளியிடும். முதலில், இந்நூலில் பிரசுரிக்க விரும்பும் ஆசிரியர்கள், தங்கள்
கட்டுரைகளை ஆங்கிலத்தில் (English) சமர்பிக்க வேண்டும். இந்த கட்டுரையை,
எங்கள் அறிவியல் விமர்சக குழு பரிசோதிக்கும். இக்குழுவின் பரிந்துரைப்படி,
ஆசிரியர்கள் தங்கள் ஆய்வு கட்டுரையை மாற்றி அமைத்து மீண்டும்
எங்களிடத்தில் சமர்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில், பதிப்பாசிரியர் தன்
இறுதி முடிவை எடுப்பார். சாதகமாக ஏற்றுக்கொள்ளபட்ட ஆய்வு கட்டுரைகள்,
எங்கள் திறமையான மொழிபெயர்ப்பு குழுவின் மூலம் தமிழில்
மாற்றியமைக்கப்படும். இவ்வாறு, மாற்றியமைக்கப்பட்ட கட்டுரை, சம்பந்தப்பட்ட
ஆசிரியர்கள் சரிபார்த்தலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அறிவியல், பொறியியல்
மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூலில் பிரசுரிக்கப்படும்.

மேலும், இந்நூலானது ஆராய்ச்சியாளர்களுக்கு பல நன்மைகளை
வழங்குகிறது. அவைகள்,

(1) ஆய்வுக்கட்டுரைகளை இலவசமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி
பெயர்த்துத் தரப்படும்.
(2) வெளியீடு மற்றும் கட்டுரை தயாரித்தல் போன்றவற்றிற்கு கட்டணம்
இல்லை.
(3) வண்ண படங்களுக்கு கட்டணம் இல்லை.
(4) கட்டுரைக்கு பக்க வரம்புகள் இல்லை.
(5) கட்டுரை வெகு விரைவாக வெளியிடப்படும்.
(6) எளிதான பதிப்புரிமை கொள்கை கொண்டது.
(7) வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையானது இலவசமாக மென்பொருள் பிரதி
(PDF) வடிவில் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும்.
(8) பத்திரிக்கை குழுவினர் சமூக ஊடகம் மற்றும் வலைப்பதிவுகள் மூலம்
உங்களின் ஆய்வுகளை பிற ஆராய்ச்சியாளர்களிடம் சென்று சேர்க்க அயராது
வேலை செய்து ஆதரவு அளிப்பார்கள்.

கட்டுரை பிரசுரிக்க வழிகாட்டல்:

ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரையை இவ்வழிகாட்டியை
படித்தபிறகு சமர்பிப்பு செய்க.

பதிப்பாசிரியர்: கு. விஜயராகவன், M. Tech., Ph. D.
(இந்த ஆராய்ச்சி நூலின் மற்ற தலையங்க குழுவினரை தெரிந்துக்கொள்ள
இங்கே அழுத்தவும்)
விஞ்ஞானி பதிப்பகம்
இணைப்புகள்
சமூக வலைத்தளம்
Copyright © 2016 by VINANIE  ·  All Rights reserved  ·  E-Mail: [email protected]

commercial cleaning broward